புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (100நாள் வேலை) பெயரை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்களின் பார்வைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் இரு சக்கர வாகனம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நூருல் யகசான். மற்றும் ஆப் சினா ஆகியோர் புதுக்கோட்டை வருகை தந்தனர்.

இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் DD பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு மாநகர தலைவர்கள் மதன் கண்ணன் பாருக் ஜெய்லானி வட்டார தலைவர்கள் சூர்யா பழனியப்பன் கூடலூர் முத்து மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் ராஜேஸ்வரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கவரி எம் ஏ கே சேட்டு சகாய ராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.





