• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மகளிர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

BySeenu

Mar 8, 2025

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் பிபிஜி கல்வி குழுமத்தில் பெண்கள் தினம் கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவில் பிபிஜி கல்வி குழுமத்தின் தலைவர் மருத்துவர் எல். பி. தங்கவேலு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைகள் புரிந்து வருவதாக கூறிய அவர், பிபிஜி கல்வி குழுமம் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதில் பெண் கல்விக்காகவும் ,பெண்களின் சமூக மாற்றத்திற்காகவும் குரல் எழுப்பியவர் பாரதியார் என குறிப்பிட்டு பேசிய அவர், ஒரு செயலை செய்வதிலும் ,சாதனை படைப்பதிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகள் ஒருங்கிணைத்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் மாணவிகள் 18 வகையான நடனங்களை ஆடி அசத்தினர்.தொடர்ந்து கல்லூரியில் சிறந்து செயல்பட்ட பேராசிரியைகள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பி.பி.ஜி.கல்வி குழுமத்தின், தாளாளர் சாந்தி தங்கவேலு மற்றும் துணை தலைவர் அக்‌ஷய் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.