• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மகளிர் காங்கிரஸ் போராட்டம்

Byகாயத்ரி

Nov 30, 2021

உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றம் அருகே திரண்ட அவர்கள், மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். அப்போது எரிபொருள், காய்கறி என அனைத்தும் விலையேறிவிட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தொடர்ந்து போலீஸ் தடுப்புகள் மீது ஏறிய நடிகை நக்மா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதில் அமர்ந்துகொண்டு போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை நக்மா குற்றம்சாட்டினார். எரிபொருள் விலை ஏற்றதால் உணவு பொருட்களும் விலை உயர்ந்து வருவதாக அவர் கூறினார்.