• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினரை தெரியாதாம்.!?

அகஸ்தீஸ்வரம் தேர்தல் மையத்தில் பணிக்கு வந்த காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினரை தெரியாதாம்.!?

இந்தியாவின் 18_வது நாடாளுமன்ற தேர்தல் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது வாக்கை அகஸ்தீஸ்வரம் வாக்கு பதிவு செய்ய கட்சியின் தொண்டர்கள் உடன் வாக்கு பதிவு செய்ய வந்த போது, அங்கு பணியில் இருந்த வெளி மாவட்ட பெண் காவல்துறை அதிகாரி விஜய் வசந்தை பார்த்து நீங்கள் யார் எதற்காக இங்கு கூட்டம் போடுகிறீர்கள் என ஒருமையில் பேசியதை கண்டித்து, காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் உடன் வந்த தமிழக காங்கிரஸ் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் இதை கண்டித்து காவல்துறை அதிகாரியிடம், நீங்கள் யார் காவல் துறை அதிகாரியா? முறையாக சீர் உடை அணியாதது ஏன் என்று கேள்வி எழுப்பலாமா? காலில் சப்பல் அணிந்திருக்கிறீர்கள், தலையில் காவல்துறை தொப்பி இல்லையே நீங்கள் யார் என கேள்வி எழுப்பியது.

தமிழக காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்தை பார்த்து நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினரா என கேள்வி எழுப்பியது. வாக்கு பதிவுக்கு முன்பே பிரச்சனையை எழுப்பியது பல பத்திரிகை,ஊடக செய்தியாளர்கள் முன் நடக்க தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்கு பதிவை செய்தி பதிவு செய்வதற்கு முன் பெண் காவல்துறை அதிகாரி ஏற்படுத்திய செயல் பரபரப்பை பத்தவைத்த நிலையில், பணிக்கு வந்த வடமாநில அதிகாரி விஜய் வசந்திடம் நேரில் வருத்தத்தை தெரிவித்ததையும் பத்திரிகையாளர்கள்
அனைவருமே பார்த்துக்கொண்டு நின்றனர்.