• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கணவனால் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்ட பெண்; 4 மணி நேரத்தில் நடந்த அறுவை சிகிச்சை

By

Sep 11, 2021 ,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கிழையூரை சேர்ந்தவர் கண்ணன் . இவரது மனைவி குமுதவள்ளி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு முதல் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அரிவாளால் குமுதவள்ளியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.


இரத்த வெள்ளத்தில் சரிந்த குமுதவள்ளி முகம் மற்றும் தாடையில் பலத்த காயமடைந்தார் . குமுதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தின் சிகிச்சைக்காக மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவக்கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

குமுதவள்ளியை மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும்போது முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தொடர்ந்து 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தாக தெரிவித்தார் . மேலும் முக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் அழகர்சாமி, மயக்க மருந்து நிபுணர் இனியா, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் கணேஷ்குமார் அடங்கிய குழுவினர் அமைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அந்த பெண்ணுக்கு மூச்சு விட சிரமம் ஏற்படும் என்பதால் தொண்டையில் குழாய் பொருத்தி அதன் வழியாக மூச்சு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பழைய நிலைக்கே முகம் வந்து விடும் என தெரிவித்தனர் . இந்நிலையில் பெண் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினர்.