• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் நிறுத்தி வைப்பு

Byவிஷா

Apr 1, 2024

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்தக் கட்டண உயர்வை திடீரென நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தக் கட்டண உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதியும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதியும் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஏப்ரல்1ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுருந்தன.
இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கட்டண உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்ந்துள்ளது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.