சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட், இன்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தனது குடும்பத்தின் நலத்திற்காகவும், தம்பி ரஜினிகாந்தின் உடல்நலம் மற்றும் திரையுலக வெற்றி தொடரவும் வேண்டி, முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மூலவருக்கு 101 லிட்டர் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, உற்சவர் மற்றும் பிற சன்னதிகளிலும் அவர் வழிபாடு நடத்தினார்.

திருக்கோவில் சார்பில் அர்ச்சகர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பிரசாதங்களை வழங்கினர். ரஜினிகாந்தின் சகோதரர் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவரைக் காண்பதற்காக கோவில் வளாகத்தில் திரண்டனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணா கெய்க்வாட் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். திருப்பரங்குன்றத்தில் இந்த முருகர் தரிசனத்திற்காக ஏற்பாடு பண்ணிருக்காங்க. நம்ம சரவணன் சிவராமகிருஷ்ணன், தர்மராஜன் இவங்க எல்லாம் தரிசனத்திற்காக விசேஷமான தரிசனமா இது இருக்கு.
எல்லாரும் நல்லா இருக்கணும்னு நானும் வேண்டிக்கிட்டேன். எல்லாரும் நல்லா இருக்கணும்… ரசிகர்களும் நல்லா இருக்கணும், மக்களும் நல்லா இருக்கணும், குடும்பம்… எல்லாம் நல்லா இருக்கணும்னு நான் வேண்டிக்கிறேன்.”
ரசிகர்கள் வந்து சூப்பர் ஸ்டார் மேல அளவுகடந்த அன்பு வச்சிருக்காங்க, நிறைய இருக்காங்க… அதை பற்றிய கேள்விக்கு

அதாம்மா விசேஷம்… அதான்… அது ரொம்ப மகிழ்ச்சி. எல்லாம் நல்லா இருக்கணும்… எல்லா குடும்பமும் நல்லா இருக்கணும். நீங்க எல்லாம் சந்தோஷமா இருந்தாதான் எல்லாருக்கும் சந்தோஷம். யாருக்கும் எதுவும் நோய் நொடிகள் இல்லாம இருந்தா நல்லா இருக்கும்.










