• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா..? மத்திய அமைச்சர் பதில்

ByA.Tamilselvan

Jun 11, 2023

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ஓராண்டுக்குள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கைக்கு வழி வகுக்கும் என தகவல்கள் கூறப்பட்டு வந்தது.இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிஹ் பூரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவு குறித்து அவர் விளக்கினார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அது தொடர்பாக அமைச்சர் பதில் கூறியதாவது: “தற்போது அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடும் நிலையில் நான் இல்லை. இந்த விவகாரத்தில் நுகர்வோருக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை அரசு நிச்சயம் உறுதி செய்யும். சர்வதேச சந்தையில் விலை சீராக இருந்தால், அடுத்த காலாண்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்யும். என அவர் தெரிவித்தார்.