• Mon. Mar 24th, 2025

திருவாடானையில் சின்னத்தை அறிவித்த, ஒபிஎஸ் சென்டிமென்ட் ஜெயிக்குமா?

தேசிய ஜனநாயக கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது சின்னத்தை திருவாடானையில் அறிமுகம் செய்தார். சென்டிமென்ட் காரணமாக தனது பலாப்பழம் சின்னத்தை அவர் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். ஆரம்பம் முதலே பல்வேறு இடையூறுகளை சந்தித்த அவருக்கு, ஒரே பெயரில் 5 வேட்பாளர்கள் களம்கண்ட நிலையில், சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் என தொடர்ந்தது. நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை இராமநாதபுரத்தில் வெளியிட விரும்பாத ஒபிஎஸ் திருவாடானையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் மத்தியில் வெளியிட்டார். பலாப்பழம் சின்னம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெற்றிக்கனியாய் இந்த சின்னம் கிடைத்துள்ளது. எனவே 39 தொகுதியிலும் எடப்பாடி அணியினர் டெபாஸிட் காலியாகும். மீண்டும் அதிமுகவை நாம் கைப்பற்றுவோம் என்று பேசினார். ரவீந்திரன் எம்.பி, திருவாடானை ஒன்றிய செயலாளர் செங்கை ராஜன், ஆணிமுத்து வெற்றிவேலன், கே.கே.பாண்டி, செல்வநாயகம், பிஜேபி ஆன்மீக பிரிவு மாநில செயலாளர் குருஜி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவாடானையில் தனது சின்னத்தை அறிமுகம் செய்தது. சென்டிமென்டாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் என கட்சியினர் கூறினர். ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக எம்.பி. தேர்தலிலும் முதல் முறையாக சுயேச்சை சின்னத்திலும் போட்டியிடுவது குறிப்பிடதக்கது.