

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 20ஆம் தேதி நடைnபுறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு 12 ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த நுழைவு தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வுகள் நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த வகையில், நடப்பாண்டில் நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு இன்று ஜூலை 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதல் கட்ட ஒதுக்கீடு ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

