• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெறிச்சோடி உதகை ரோஜா பூங்கா

வார விடுமுறையான இன்று உதகை ரோஜா பூங்காவில் குறைந்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள்…
சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறையான இன்று உதகை ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.
குறிப்பாக உதகை நூற்றாண்டு ரோஜா பூங்கா சுற்றுலாப் பயணிகள் குறைவாக காணப்படுகிறது.