



கோவை வடவள்ளி பகுதியில் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் நுழைந்தனர். நாய்கள் எழுப்பிய சத்தத்தால் குச்சியுடன் ஒருவர் துரத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகின.
கோவை மாவட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வீடுகளில் வைத்து இருக்கும் உணவுப் பொருள்கள், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்களை யானைகள் புகுந்து தின்று சேதத்தை ஏற்படுத்தி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையடுத்து தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் கோவை மாநகரப் பகுதியான வடவள்ளி, தில்லை நகர் பகுதியில் குட்டிகளுடன் புகுந்த காட்டுப் பன்றிகளை கண்ட அந்த வீதியில் இருந்த நாய்கள் குலைத்து, சத்தம் எழுப்பியது. இதனைக் கண்ட ஒருவர் குச்சியுடன் காட்டுப் பன்றிகளை விரட்டச் சென்றார். இதனைக் கண்ட அந்தக் காட்டுப் பண்புகள் அங்கு இருந்து மீண்டும் திரும்பி வனப் பகுதியை நோக்கிச் சென்றது. இந்த காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து அப்பகுதியில் தனியாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை பதிவை பதிவு செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

