


இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விசு ஆகியவை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டும் பலவகை பழங்களால் அலங்காரம் செய்தும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

மேலும் திருக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சிவபெருமான், அம்பாள், முருகப்பெருமான், நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதை அடுத்து அதிகாலை முதலே ஆயிரக் கணக்கானோர் இரண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.

புத்தாண்டு பிறந்ததை ஒட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் வந்து அதிக அளவிலான கூட்டங்களுக்கு மத்தியில் நீண்ட வரிசையில் என்று சுவாமியை தரிசித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சித்திரை கனி அலங்காரம் கண்டு மகிழ்ந்ததாகவும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

