• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரீல்ஸ் மோகத்தால் உயிரை இழந்த மனைவி..!

Byவிஷா

Nov 27, 2023

சோஷியல் மீடியாவில் தனக்கு இருந்த வந்த ரீல்ஸ் மோகத்தால் கணவன் கையாலேயே மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா, ஹரிநாராயண்பூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரிமள் பைத்யா. இவருக்கு 38 வயது, இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 35 வயதான அபர்ணா. இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மகள் நர்சரி கிளாசும், மகன் 7வது வகுப்பும் படித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் அபர்ணா ஆர்வமாக இருந்துள்ளார். இதனால், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆண் நண்பர்களுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வந்துள்ளார். இதனால் இவரது கணவர் பலமுறை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. நேற்று அதே காரணத்திற்காக இருவரும் சண்டை போட்டனர், அதில் ஆத்திரம் அடைந்த பரிமள், காய்கறி மற்றும் இறைச்சியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவரது மனைவி சரிந்து விழுந்தார். இதனையடுத்து அவர் தலைமறைவானார், சிறிது நேரத்தில், இவரது மகன் டியூஷன் முடித்து விட்டு வந்து பார்த்தபொழுது அபர்ணா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், அபர்ணாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தப்பியோடிய பரிமளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.