• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம்.., நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த கணவன்..!

Byவிஷா

Oct 9, 2023

மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போனதற்காக வருத்தப்பட வேண்டிய கணவனோ நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு வரகரை பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் திருமணமாகி மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மனைவிக்கு வேறு ஒருநபருடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடி சென்றது தெரியவந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதிலிருந்து விடுபட தனது நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்தார். அதன்படி, வீட்டில் சுமார் 250 ஆண்களுக்கு பிரியாணி, மதுபானத்துடன் விருந்து கொடுத்து நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் கமெண்ட் மற்றும் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

https://x.com/Rukmang30340218/status/1711097989589340628?s=20