• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்?… மத்திய அரசை மாட்டிவிட்ட தமிழக அரசு!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு கடந்த ஆண்டை போலவே கோவில்கள் முன்வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படி விநாயகர் சிலை ஊர்வலங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டு கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்து முன்னேற்ற கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் துர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டை போலவே சிறிய கோவில்களின் முன்பு வைக்கப்படும் சிலைகளை, இந்து அறநிலையத்துறை எடுத்து நீர்நிலைகளில் கரைக்கும் என்றும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.