• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேசிய & சர்வதேச போட்டிகளில் தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏன்?

BySeenu

Mar 23, 2024

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இதனிடையே கோவை மாவட்ட ஆட்சயரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி வீர்ர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாத சூழலி்ல், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஜோசப் சுரேஷ் மற்றும் அஜய் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தேசிய,சர்வதேச அளவில் மூன்று சக்கர வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகள் பெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், விலை உயர்வான இந்த விளையாட்டு தொடர்பான உபகரணங்களை சொந்த செலிவிலேயே வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர்,ஆனால் வீல் சேர் வாள் வீச்சு ஃபெடரேஷன் மற்றும் அம்புட்டி ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகளாக செயல்படும் சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்..சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை கூட இதுவரை காட்ட முன் வரவில்லை எனவும்,குறிப்பாக தற்போது தேசிய சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்வதில் கூட முறைகேடுகள் நடப்பதாக தெரவித்தனர்.இதனால் தமிழக வீரர்,வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கபடுவதாகவும்,இது குறித்து மத்திய மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்கள் உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்…இதே போல கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீராங்கனை தீபீகா ராணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தருந்தது குறிப்பிடதக்கது..