நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். டெல்லியில் இருந்து நேற்று இரவு கோவை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
25 ஆம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கோவை சித்தாப்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்படும் உடையுடன் வந்து சாமி தரிசனம் செய்த அவர் விளக்கேற்றி வழிப்பட்டார். மேலும் அங்குள்ள பசுவிற்கு கீரைகளை வழங்கி வணங்கினார்.