• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கல்வெட்டை மறைத்த பேப்பர் 4 மாதமாக அகற்றப்படாதது ஏன்? நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாய பெருமக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கிய பேருந்து நிலையம் இது. இந்த பேருந்து நிலையம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான கல்வெட்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2026 சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அந்த கல்வெட்டு செய்தித்தாள் கொண்டு முறையாக மறைக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், அந்த கல்வெட்டின் மீது ஒட்டப்பட்ட செய்தித்தாள் இதுவரை அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.

இங்கு தான் நாம் சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை முன் வைக்க வேண்டியுள்ளது.

பேருந்து நிலையத்தை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க வேண்டிய முழு பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளது. தினமும் பேருந்து நிலையத்தை கண்காணிக்கவும், பராமரிக்கவும் ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் கண் முன்னே 4 மாதமாக கிடக்கும் இந்த பேப்பரை ஏன் யாரும் கவனிக்கவில்லை?

இது ஒரு பெரிய வேலை அல்ல. 5 நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய சிறிய வேலை. இந்த சிறிய வேலையை கூட செய்யாமல் இருப்பது, நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

ஒரு வேளை அதிகாரிகள் பணிச்சுமை காரணமாக இதை கவனிக்க தவறியிருக்கலாம். எனவே இதை ஒரு குற்றச்சாட்டாக அல்லாமல், ஒரு கவன ஈர்ப்பு கோரிக்கையாகவே சமூக ஆர்வலர்கள் முன் வைக்கிறார்கள்.

சின்னமனூர் நகராட்சி ஆணையர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.