குளிர்சாதன வசதி ,ஏசி கார்களில் பவனி வரும் மடாதிபதிகள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?: பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்துக்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. நவீன காலத்தில் பாரம்பரிய பழகக்கதை கைவிட முடியாது என மடாதிபதி அறிக்கை விடுவது காலத்துக்கு ஒவ்வாதது. பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று மடாதிபதிகள் கூறலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மடாதிபதிகள் தங்களது மடத்தில் குளிர்சாதனம் பொருத்தியிருப்பது ஏன்? ஏசி கார்களில் பவனி வருவது ஏன்? தொலைபேசி, செல்ஃபோன், கணினி, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருளுரை ஆற்றும்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது ஏன்? என்று வினவியுள்ளார். நவீன சாதனங்களை பயன்படுத்தும் மடாதிபதிகள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்? எனவும் பழ. நெடுமாறன் சாடியுள்ளார். மடாதிபதிகள் குளிர்சாதன வசதி ,ஏசி கார்களில் பவனி வரும் இவர்கள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்? என பழ. நெடுமாறன் தன்னுடைய அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்..
ஏசி கார்களில் பவனி வரும் மடாதிபதிகள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?: பழ. நெடுமாறன் கேள்வி
