கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் படுத்தினர். நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்த பிரதமர் மோடி, அடுத்த 50 நாட்களில் நாட்டில் ஊழல், தீவிரவாதம், கள்ளநோட்டு ஒழிக்கப்படும் என்று உறுதியளித்தார். ரூ.1000, ரூ.500 நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.2000, ரூ.200 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 5-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்,
பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி பெற்றிருந்தால் ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? கருப்பு பணம் ஏன் நாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை?
பொருளாதாரம் ஏன் பணமற்ற பொருளாதாரமாக மாறவில்லை?
பயங்கரவாதம் ஏன் ஒழிக்கப்படவில்லை?
பணவீக்கம் ஏன் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை?
என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.