• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செங்கல்பட்டு இருவர் என்கவுண்ட்டர் ஏன்?

செங்கல்பட்டு இரட்டை கொலை விவகாரத்தில், காவல்துறையினரின் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். அப்பு கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின் தப்பி ஓடிய அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டு தெரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சீனிவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவரை அவரது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் மகேஷும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தீவிரமாக தேடி வந்த நிலையில், உத்தரமேரூர் திருபுலிவனம் பகுதியில் பதுங்கியிருந்த ஜெசிகா, மாதவன், மொய்தீன், தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் இவர்களை பிடிக்க முயன்ற போது, மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்க முயன்றுள்ளனர். இதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் தற்காப்புக்காக நடத்திய என்கவுண்டரில் ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.