• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ் சினிமாவில் முதன்முதலில், பார்ட் 2 ட்ரெண்ட் செய்தவர் யார்?

Byadmin

Feb 2, 2022

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது..

அவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படம் சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்த படங்களும் வெற்றி பெற்றது.

அதேபோல் பாகுபலி படமும் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது.

ஆனால், தமிழ் சினிமாவில் முதல் முறையாக பார்ட் 2 படங்களை கொண்டு வந்தவர் யார்?

தற்போது இரண்டாம் பாகம் படங்கள் உருவாக அடிக்கல் நாட்டியவர் உலகநாயகன் கமலஹாசன் தான்.

1979இல் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் கல்யாணராமன். இப்படத்தை ஜிஎன் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.

இந்தப்படத்தில் கமல், கல்யாணம் மற்றும் ராமன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் தொடர்ச்சியை 1984 இல் ஜப்பானில் கல்யாணராமன் என்று எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதுவே தமிழ் சினிமாவில் முதல்முறையாக வந்த பார்ட் 2 படமாகும். இப்படத்திற்குப் பிறகுதான் பல பார்ட் 2 படங்கள் வெளியானது.