• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வடிவேலுவுக்கு ஜோடி இவரா?

வடிவேலுவுடன் ஜோடியாகப் போவது யார் என்கிற அட்டகாசமான அறிவிப்பை அந்த நடிகையே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு நடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சேரப்போவதாக, கீர்த்தி சுரேஷ், ஹாலிவுட் நடிகை என பலரின் பெயர்கள் அடிபட்டன..

இப்படி ஏகப்பட்ட நடிகைகள் பெயர் அடிபட்டு வந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் தான் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் வெற்றியுடன் பம்பர், விஜய்சேதுபதியுடன் பொன்ராம் படம், ஆர்ஜே பாலாஜியுடன் ஒரு படம் என 3 படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன், நாய்சேகர் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ஷிவானி.