• Wed. Apr 24th, 2024

இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள “வேள்பாரி ” படத்தின் நாயகன் யார்?

ByA.Tamilselvan

Nov 8, 2022

இந்தியன் -2 பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக சொல்லப்பட்டநிலையில் தற்போது யார் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர். இப்போது இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்க விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார்.எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை மையமாக வைத்து இயக்குனர் ஷங்கர், ஆயிரம் கோடி பட்ஜெட்டில் வரலாற்று படம் ஒன்றை எடுக்க உள்ளாராம்.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்நிலையில் வரலாற்று கதையம்சம் கொண்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் தயாராகும் வரலாற்று படங்களுக்கு தனிமவுசு என்றே சொல்லலாம். இதன் காரணமாக வரலாற்று படங்கள் இயக்கும் ஆசை பல்வேறு முன்னணி இயக்குனர்களுக்கு வந்துள்ளது. அவர்களின் இயக்குனர் ஷங்கரும் ஒருவர்.
வேள்பாரி படத்திற்கான பணிகளும் ஒருபக்கம் முழுவீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. பின்னர் கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் பெயர் அடிபட்டது.ஆனால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது போல் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி வேள்பாரி நாவலை மையமாக வைத்து ஷங்கர் இயக்க உள்ள வரலாற்று படத்தில் பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது. தமிழ் நாவலில் பாலிவுட் ஹீரோ நடித்தால் செட் ஆகுமா என்பது தான் தற்போது அனைவரது கேள்வியாகவும் உள்ளது. முன்னதாக ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *