பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிபி வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 80 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், போட்டியாளர்கள் இந்த வாரம் தங்களுக்கு பிடித்தமான உறவுகளை டாஸ்க் வாயிலாக ஆதரித்து வருகின்றனர்.
இதுவரையும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என கொஞ்சமும் யூகிக்க முடியாத நிலையில் உள்ளது பிக்பாஸ் சீசன் ஐந்துநிகழ்ச்சி.இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 பேர் உள்ளனர். இதனால் ஆட்களை குறைக்க டபுள் எலிமினேஷன் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்கா, பாவனி, சிபி, நிரூப், வருண், அக்க்ஷரா ஆகிய ஆறு பேர் இடம்பெற்றுள்ள நிலையில், பாவனி வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஏனெனில் அபிநய் இருக்கும் போது பாவனி காதல் என்று ஒரு எண்ணத்தில் இருந்த நிலையில், பின்ப அபினயை பிடிக்காது என்று கூறியதோடு, அமீருடன் நெருக்கமாக பழகி வருகின்றார்.இந்நிலையில் இந்த விவகாரத்தினால் இந்த வாரம் பாவனி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையில்முதல் இடத்தில் பிரியங்காவும் இரண்டாவது இடத்தில் பாவனியும் உள்ளனர்.
மூன்றாவது இடத்தில் நிரூப்பும் நான்காவது இடத்தில் அக்க்ஷராவும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் வருணும் ஆறாவது இடத்தில் சிபியும் உள்ளனர். இதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சிபி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இன்று வாக்களிக்க கடைசி நாள் என்பதால் வாக்கு எண்ணிக்கை எப்படி வேண்டுமானாலும் மாறும் என கூறப்படுகிறது. இதனால் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ள போட்டியாளர்களின் பட்டியலில் வருண், அக்ஷரா மற்றும் சிபி ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
சிபி டைட்டில் வின்னர் ஆக வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் அவரது பெயர் டேஞ்சர் ஸோனில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.