• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வாட்ஸப்பில் கருத்துக்கணிப்பு.. புதிய அப்டேட்..!!

Byகாயத்ரி

Sep 17, 2022

உலகில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் தனது செயலியில் கருத்துக்கணிப்பு கேட்கும் அப்டேட் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செயலியானது தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் மேலும் ஒரு அப்டேட்டில் செயல்பட்டு வருகிறது. இதன்படி குரூப் சேட்களில் பயனர்கள் கருத்துக் கணிப்புகளை உருவாக்க முடியும், இதை 12 விருப்பங்கள் வரை இருக்கக்கூடும் என்றும், அப்டேட் வெளியிடப்படும் முன் இந்த மதிப்பு மாறலாம் என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்டை தற்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறப்பதாகவும், எனவே இது வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு தற்பொழுது கிடைக்காது என்றும் வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த அப்டேட்டிற்கான நுழைவுப்புள்ளி உங்களது வழக்கமான சேட் பக்கத்தில் இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.