• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்.

ByA.Tamilselvan

Sep 21, 2022

குறுஞ்செய்திகளை ‘எடிட்’ செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது.
உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது வரை வாட்ஸ் அப்பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை ‘எடிட்’ செய்ய வழி இல்லை. ஒருமுறை குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால், அதனை எடிட் செய்திட முடியாது. மாறாக அதை நீக்க வேண்டிய நிலை தான் இருந்தது . நீண்ட வாக்கியங்களில் குறுஞ்செய்தி அனுப்பும் போது, சிறு வாக்கிய தவறுக்காக மொத்த குறுஞ்செய்தியையும் நீக்க செய்வது பயனர்களுக்கு சிக்கலாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை ‘எடிட்’ செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த வசதி அறிமுகமான பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம்.