வாட்ஸ்அப், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய பதிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது, வெளியாகியிருக்கும் புதிய பதிப்பில், குரல் பதிவு செய்திகளை பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன், அவற்றை சரிபார்க்க அனுமதிக்கும் ‘வாய்ஸ் மெசேஜ் பிரிவியூ’ (voice message preview) என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் மூலம், பயனர்கள் தங்கள் குரல் பதிவு செய்தியை பிறருக்கு அனுப்பும் முன், அதை அவர்கள் கேட்டு சரிபார்க்க உதவும். ஒருவேளை தாங்கள் அனுப்பிய குரல் பதிவு செய்தி அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், உடனடியாக அதை நிராகரித்து விட்டு, வேறு புதிய குரல் பதிவு செய்தியை அனுப்பி கொள்ளலாம். இது ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ், இணைய பக்கம், கணினிகள் உள்பட அனைத்து தளங்களுக்கும் சேர்த்தே வெளியிடப்பட்டுள்ளது.