திருமயத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறந்து பின்பு வாட்ஸ்அப் செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து ஆலோசனையின்படி மாவட்ட துணைச்செயலாளர் சரசு மாரிமுத்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில்பொதுமக்கள்தாகம்தணிக்கும்விதமாகநுங்கு,இளநீர்,சாத்துக்குடி,வெள்ளரிக்காய்,பலாச்சுளை,நீர்,மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.பின்பு பொதுமக்கள் அவற்றை பெற்று சென்று இளைப்பாரி சென்றனர்.
பின்பு வாட்ஸ் அப் (Whaats ap) செயலியின் மூலமாக அமைக்கப்பட்டிருந்த உறுப்பிணர் சேக்கை முகாமை துவக்கி வைத்த PK.வைரமுத்து அவர்கள் .
பொது மக்களுக்கு அண்ணதானத்தை வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.