• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராதே சியாம் டிரைலர் முன்மொழிவது என்ன?

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘ராதே ஷியாம்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார் இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று டிரெய்லர் ஹிட்டடித்துள்ளது

பிரபாஸுக்கும் பூஜா ஹெக்டே விற்கும் இடையிலான காதல் தான் படத்தின் முக்கிய அம்சமாக டிரெய்லர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் காதல் வாழ்க்கையை விதி எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் சாராம்சம் என்று டிரெய்லர் பார்க்கும்போது புரிகிறது
உலக புகழ்பெற்ற கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ்
டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள கப்பல் காட்சியின் விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜிஐ பார்ப்பவர்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது காட்சிகளுக்கு ஏற்றார் போல பின்னணி இசை வலிமை சேர்க்கிறது.

யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 14 ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.