• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமி

ByA.Tamilselvan

Mar 20, 2023

இன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார். உடனே சபாநாயகர் அப்பாவு பட்ஜெட்டை தாக்கல் செய்து முடிந்த பிறகு பேசுங்கள். உங்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியை பேச விடாததை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கோஷமிட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ….. திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உள்ளிட்ட எல்லா வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்த நிலையில், வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் ஏன் இல்லை. திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்த போதும் வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடி உள்ளது. அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.