• Mon. Apr 29th, 2024

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு, மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு என்று தி.மு.க.விடம் சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்கள் குறித்து மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரம் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது.

சிவகாசி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவருமான லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருப்பசாமி, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கியம், சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேஷ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, திருத்தங்கல் கிழக்குப் பகுதி கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருத்தங்கல் மேற்கு பகுதி கழகச் செயலாளர் சரவணகுமார், சிவகாசி மேற்கு பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி கிழக்கு பகுதி கழகச் செயலாளர் சாம் என்ற ராஜா அபினேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

பூலாஊரணி ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி ராஜேந்திரன், பெரியபொட்டல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சுந்தரராஜமூர்த்தி, மம்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள்தங்கமுனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் நர்மதா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் கங்காதேவி, தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் மாசாணம, எம்ஜிஆர் மன்றம் சுந்தர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்புக்காளை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முனியசாமி, தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் மாரியம்மாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கண்ணன், எம்ஜிஆர் மன்றம் சுப்புராஜ், துலுக்கப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, மாணவர் அணி கமல்குமார் வரவேற்புரை ஆற்றினர்.

கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைக் கழக பேச்சாளர் பலகுரல் சந்தானம், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளரும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாண எம்.எஸ்.ராஜவர்மன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் சாராயக் கடைகளையும் கள்ளுக் கடைகளும் திறக்கப்பட்டன. தள்ளாத வயதிலும் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கருணாநிதி வீட்டுக்குச் சென்று கலைஞர் இடத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார். ஆனால் தொடர்ந்து மதுக் கடைகளையும் கள்ளுக்கடைகளையும் கருணாநிதி திறந்து வைத்தாார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொடங்கிய மதுக்கடைகளை இன்று வரை மூட முடியவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் எடப்பாடியார் ஆட்சியில் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கருப்பு சட்டை போட்டு கருப்புக்கொடியை பிடித்து மதுக்கடைகளை மூடவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இன்றைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்று வரை அவர்கள் மதுக்கடைகளை பூட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சொல்வதை திமுக என்றைக்கும் செய்வதே கிடையாது. திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டங்கள் மிகப்பெரிய திட்டங்கள் வந்திருக்கின்றதா என்று சொன்னால் வரவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் புரட்சித்தலைவி அம்மாவுடைய ஆட்சியில், எடப்பாடியார் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் திமுக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சியில் புதிதாக ஏதாவது திட்டத்தை தொடங்கி திறந்து வைத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் இதுவரை கிடையாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழஙகினார். ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலை இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி எல்லா மாணவர்களுக்கும் சத்துணவு திட்டம் கொண்டு வந்து உணவு அளித்து ஊக்கம் கொடுத்து படிக்க வைத்தவர் மாபெறும் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.

பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உதவினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். தண்ணீரைத் திட்டம் மூலம் கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மறைந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலம் பொற்கால ஆட்சியாக இருந்தது. புரட்சித்தலைவர் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. புரட்சித்தலைவர் மறைவிற்கு பின்பு அண்ணா திமுக அழிந்து விடும், ஒழிந்து விடும் என்று அண்ணா திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என்று திமுகவினர் கொக்களித்தனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அண்ணா திமுகவிற்கு தலைமை தாங்கினார். முடக்கப்பட்ட இரட்டை இலை மீட்டெடுத்தார். புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஆட்சியை அண்ணா திமுக ஆட்சியை மீண்டும் அமைப்பேன் என்று சபதம் எடுத்தார். அண்ணா திமுகவை அரியணையில் அமர்த்தி காட்டினார். ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகின்ற பெருமையை எடுத்துக் கொடுத்தார்.
2011ல் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2016லும் ஆட்சிக்கு வந்து சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி மாபெரும் இயக்கமாக இந்த இயக்கத்தை கொண்டு சென்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி மறைவிற்கு பின்பு அண்ணா திமுக ஆட்சி கலைந்து விடும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிதைந்து விடுவார்கள் என்றெல்லாம் திமுக தலைவர்கள் பேசினார்கள். எடப்பாடியார் அண்ணா திமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஆட்சி கட்டில் அமர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் நல்லாட்சி கொடுத்தார்.

எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அற்புதமான திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்தில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி, தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் மிக்சி, ஃபேன், கிரைண்டர், மின்விசிறி விலையில்லாமல் வழங்கியவர் புரட்சிதலைவி அம்மா அவர்கள். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அன்னதான திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புனித யாத்திரை செல்வதற்கு கோடிக்கணக்கான தொகை ஒதுக்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்துகளையும், கிறிஸ்துவர்களையும். இஸ்லாமியர்களையும் ஒன்று போல் பாதித்து ஆட்சி நடத்திய தலைவி புரட்சி தலைவி அம்மா அவர்கள்.

எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அனைத்து கண்மாய்களும் ஏரிகளும் தூர்வாரப்பட்டது. இன்று ஏரிகள் குளங்களில் கண்மாய்களில் தண்ணீர் நிற்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் எடப்பாடியாரின் சிறந்த ஆட்சிதான். உச்ச நீதிமன்றம் தலையிட்டு பிறகு நீட் தேர்வில் ரத்து செய்ய முடியாது என்பதை அறிந்த எடப்பாடியார் அவர்கள், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அதை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்று அங்கீகாரம் வழங்கியவர்தான் எடப்பாடியார் அவர்கள. எடப்பாடியார் கொண்டு வந்த திட்டத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுனார். முடியாததை முடியும் என்று கூறி படிக்கின்ற மாணவர்களை தடுக்கும் பணியைத்தான் திமுக செய்கின்றது. அரசு பள்ளி மாணவர்களை டாக்டர் ஆக்கிய பெருமை எடப்பாடியாரை சேரும். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அனுமதி பெற்று தொடங்கி வைத்தவர் எடப்பாடியார். அதிலே ஒன்றுதான் விருதுநகரில் உள்ள அரசு மெடிக்கல் கல்லூரி. மேலும் அதிமுக ஆட்சியில்தான் சிவகாசியில் ஒரு அரசு கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு அரசு கல்லூரி, சாத்தூரில் ஒரு அரசு கல்லூரி, அருப்புக்கோட்டையில் ஒரு அரசு கல்லூரி கொண்டு வரப்பட்டது. மாணவர் சமுதாயம் போற்றுகின்ற திட்டத்தை எடப்பாடியார் அவர்கள் கொண்டு வந்தார். விருதுநகர் மாவட்டத்திற்கு முதல் மெடிக்கல் கல்லூரியை வாங்கி கொடுத்த பெருமை எங்களைதான் சேரும. மத்திய அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக கொண்டு வந்தது. ஆனால் திமுக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து திட்டங்களை தடுத்து வருகின்றது. எந்த திட்டங்களையும் அவர்களால் கொண்டுவர முடியவில்லை. ஒரு கலெக்டரை எதிர்த்து செயல்பட்டால் ஒரு ஊராட்சி நிர்வாகம் செயல்பட முடியுமா. மத்திய அரசுடன் மோதி சமாதானத்தை பற்றி பேசி தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை தடுத்து நிறுத்தி வைக்கின்றனர்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சகோதரர்களாக ஒற்றுமையாக இருந்து வரும் இந்த நாட்டில், சனாதானம் என்ற போர்வை மூலம் மத மோதலை உருவாக்குகின்ற பணியை திமுக செய்து கொண்டிருக்கிறது. இதை தடுக்கின்ற பணியை அண்ணா திமுக செய்து கொண்டிருக்கிறது. அள்ளி, அள்ளி கொடுக்கிற கட்சி அண்ணா திமுக, அதை தடுக்கின்ற கட்சி திமுக, எடப்பாடியாரின் ஆட்சியில் எல்லா கிராம சலையிலும் தார் சாலைகளாக மாற்றப்பட்டன. பட்டாசு விபத்துக்கள் நடந்த போது நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் கூறி எல்லா பட்டா ஆலைக்கு செல்லும் சாலைகளும் புதிதாக போடப்பட்டன. என்னுடைய மூயற்சியால் அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் செல்லும் சாலைகளும் புதிதாக போடப்பட்டன. புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்தில் என்னுடைய முயற்சியால் பட்டாசு பயிற்சி மையம் சிவகாசியில் அமைந்தது.

சிவகாசியில் பெரியார் காலனி இடிக்கும் தருணம் வந்தபோது புரட்சித்தலைவி அம்மாவிடம் கூறினேன். ஏழை, எளிய மக்கள் என்று கூறினேன். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் நியமித்து ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்து பார்த்தார்கள். உச்ச நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு போட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். உடனடியாக குடிசை மாற்று வாரியம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் வீடுகளை கட்டிக் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இதே சப் கலெக்டர் அலுவலகத்தில் வைத்துதான் நான் அவர்களுக்கான வீட்டு சாவியை கொடுத்தேன். தற்போது ஆக்கிரமப்புகள் அகற்றம் என்ற பெயரில் பொதுமக்களை திமுக துன்புறுத்தி வருகின்றது. தகப்பன் போட்டோவை கூட எடுக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வீடுகளை இடிக்கின்றனர்.

அண்ணா திமுக ஆட்சி காலத்தில் ஆக்கிரப்புகள் அகற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்த உடனே வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். பட்டாசு ஆலை அதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் பதிக்கப்படுகின்றனர். எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர். சொத்து வரியை கூட்டியாச்சு, மின்சார கட்டணத்தை கூட்டி விட்டனர். தக்காளி விலையில் இருந்து தங்கம் விலை வரை எல்லாம் ஏறிப்போச்சு. புரட்சித்தலைவி அம்மாவுடைய ஆட்சிக்காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், ,10 படித்தால் 25 ஆயிரம் ஒரு பவுன் தங்கம் தங்கம், தங்கம் வெட்டி எடுக்கின்ற பெல்சியம் நாட்டில் கூட தங்கம் ஓசியாக கொடுத்தது கிடையாது. ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். நாங்கள் ஆட்சியை விட்டு இறங்கும் நேரத்தில் கூட சிவகாசி பகுதியில் 5000 பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கினேன். திருமண உதவித்தொகை வழங்கினேன்.

கூடமுடையார் அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதியில் மிகப் பெரிய வெள்ளம் வந்து ஏராளமானோர் இறந்துவிட்டனர். அன்றைய காலகட்டங்களில் இப்போது போன்று வாகன வசதிகள் எதுவும் கிடையாது. அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உடனடியாக விமானம் மூலம் மதுரை வந்து கார் மூலமாக கூடமுடையார் அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதிக்கு சென்றார். இதனை கேள்விப்பட்ட நான் அன்றைய தினத்தில் புரட்சித்தலைவர் காரின் பின்னாலயே ஓடினேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்த பிறகுதான் நின்றேன். ஆற்றுப்பகுதியை பார்வையிட்ட புரட்சித்தலைவர் அவர்கள், உடனடியாக பாலம் கட்ட உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கினார். மக்களின் தலைவன் என்று நிரூபித்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அதே போன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் மனிதநேயம் கொண்டவர். தனக்கு குடும்பம் இல்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் என்னுடைய குடும்பம் என நினைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது இந்து கோயில்களிலும் கிறிஸ்துவ ஆலயங்களில் மசூதிகளில் பிரார்த்தனை நடைபெற்றது. புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி மறைந்த போது கூடிய கூட்டம் எந்த தலைவர்களுக்கும் சென்னையில் இதுவரை கூடியதில்லை. சென்னையே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா திமுகவின் உண்மையான தொண்டராக விளங்கும் எடப்பாடியார் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் ஏற வேண்டும். அற்புதமான ஆட்சியை கொடுக்கக்கூடிய அருமையான பொதுச் செயலாளர் அவருடைய ஆட்சியில் விருதுநகர் மாவடடத்திற்கு கேட்டதெல்லாம் கொடுத்தார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம இன்று பணி நடந்து கொண்டிருக்கின்றது. அருப்புக்கோட்டை வரை காவிரி தண்ணீர் வரப் போகின்றது. இந்த திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடியார் அவர்கள். அதற்கு மூல காரணமாக செயல்பட்டது நானதான். சிவகாசி மாநகராட்சி, ராஜபாளையம் நகராட்சி, சாத்தூர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி, விருதுநகர் நகராட்சிக்கு 450 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். எனது முயற்சியால் எடப்பாடியார் அவர்கள் இந்த தி்டத்தை விருதுநகர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி வழங்கினார். விருதுநகர் பாதாள சாக்கடை திட்டத்தை அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம், ராஜபாயைத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். இப்படி அற்புதமான திட்டங்கள் கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில் தான். ராஜபாளையம் ரயில்வே பாலம், விருதுநகர் ரயில்வே மேம் பாலத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்கல் ரயில்வே மேம் பாலம், இருக்கன்குடி ரயில்வே மேம்பாலம் என மூன்று ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அரசாணை போட்டு பணம் ஒதுக்கி விட்டு தான் நாங்கள் ஆட்சியை விட்டு இறங்கினோம். இன்று வரை அந்தப் பணியை திமுக தொடங்கவில்லை.

சிவகாசி சுற்றுச்சாலை அண்ணா திமுக ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டு இடங்களை எல்லாம் எடுத்து விட்டோம். டெண்டர் விடும் நேரத்தில் தேர்தல் வந்துவிட்டது. தேர்தல் வந்த நேரத்தில் வேலைகள் அனைத்தும் நின்று விட்டன. இன்று வரை இந்த பணிக்கு நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கெல்லாம் அரசாணை என்னிடம் இப்பொழுது உள்ளது. சிவகாசி மாநகராட்சிக்கு அற்புதமான கட்டிடத்தை நாங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். அண்ணே காலனி. எம்ஜிஆர் காலனி. இந்திரா நகர் வசித்த பொதுமக்களுக்கு அண்ணா திமுக ஆட்சியில் தான் பட்டா வழங்கப்பட்டது. திமுக போன்று குடியிருப்பவர்களை விரட்டி அடிக்கவில்லை. குடியிருப்பவர்களுக்கு பட்டாவை வழங்கி வாழ்வாதாரத்தை நாங்கள் கொடுத்தோம். அண்ணா காலனி இடிக்க முற்பட்டபோது அவர்களுக்கு இரவோடு இரவாக பட்டாவை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது அண்ணா திமுக அரசு. இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இந்த தொகுதிக்கு செய்த வளர்ச்சி பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சிவகாசி தொகுதி அருமையான தொகுதியாக ஆக்கிய பெருமை எனக்கு உண்டு.

சிவகாசி தொகுதியில் மட்டும் 16 கால்நடை மருத்துவ கட்டிடங்களை கொண்டு வந்துள்ளேன். திருத்தங்கல்லில் ஒரு கால்நடை மருத்துவமனை கொண்டு வந்துள்ளேன். சிவகாசி அரசு மருத்துவமனையை ஹைடெக் மருத்துவமனையாக தரம் உயர்த்தி தீக்காய சிகிச்சை பிரிவை கொண்டு வந்துள்ளேன். மகப்பேறு மருத்துவமனையை கொண்டு வந்துள்ளேன். சிவகாசி பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்துள்ளேன். ஏராளமான பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்தி புதிதாக கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளேன். நான் கொண்டு வந்து திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திமுக ஆட்சியில் எதுவுமே எந்த திட்டங்களும் புதிதாக கொண்டு வரப்படவில்லை. பூலா ஊரணி பள்ளியில் 2 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன், மாரனேரி பள்ளிக்கு 2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளேன். மீனம்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன். திருத்தங்கல் சத்யா நகரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளேன். எஸ்.ஆர்.அரசு பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளேன். நான்கு புதிய பள்ளிக்கூடங்களை நான் கொண்டு வந்துள்ளேன். சிவகாசிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன். சிவகாசிக்கு புதிய நீதிமன்ற கட்டிடத்தை கொண்டு வந்துள்ளேன். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

அண்ணா திமுக ஆட்சியில் புரட்சிதலைவி அம்மா, எடப்பாடியார் ஆட்சியில் இப்படி ஏராளமான திட்டங்களை இந்த தொகுதிக்கு நான் கொண்டு வந்துள்ளேன். இப்போது திமுகவில் யாராவது ஒரு மேடை போட்டு அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை கூற முடியுமா. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடைபெறும். சட்டமன்றத் தேர்தலுக்காக ஏழாயிரம் கோடியை ஒதுக்கி ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை தொடங்கி வைத்துள்ளனர். ஓட்டுக்காக கட்சி நடத்துகின்ற ஆட்சி திமுக. நாட்டுக்காக ஆட்சி நடத்துகின்ற கட்சி அண்ணா திமுக. ஏராளமான திட்டங்களை செயல்படுத்திய எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டுமா, இல்லை சுயநலத்திற்காக சந்தர்ப்பத்திற்காக குடும்ப ஆட்சி நடத்தும் திமுக வேண்டுமா என பொதுமக்கள் சிந்தித்துப் பார்த்து வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் முத்தரையிட்டு அண்ணா திமுகவை மாபெறும் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் முத்துப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, விருதுநகர் மாவட்ட முன்னாள் இந்து சமய அறங்காவலர் குழுத்தலைவர் பலராம், மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மாரிஷ்குமார், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர்கள் இளநீர் செல்வம், மணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், சிவகாசி மாமன்ற உறுப்பினர் கரைமுருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிகுமார், சிவகாசி மாமன்ற உறுப்பினர் சாந்திசரவணகுமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜிஓ காலனி மாரிமுத்து, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் வசந்தகுமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் குமரேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பாலாபாலாஜி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கூடலிங்கபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் தர்மர், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் தொகுதி கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் அமல்ராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருமுருகன், தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் முத்துராஜ, மாவட்ட எம்ஜிஆர் மன்றம் பள்ளப்பட்டி ரமேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் சாகுல்ஹமீது, மேற்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் மணிமாறன், முன்னாள் மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் சையது சுல்தான், சிவகாசி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி, கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு வல்லவராஜா, வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கரேஸ்வரன், மாநகர இளைஞரணி கார்த்திக், வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜெயராம், அம்மா பேரவை மற்றும் இளைஞரணி செல்வகுமார், அழகர்குமார், ஆட்டோ மூர்த்தி, பால்ராஜ், தங்கப்பாண்டி, ராஜகோபால், வடபட்டி ராஜா, பிரகாஷ், இரணியன் மற்றும் சிவகாசி தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், சிவகாசி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், திருத்தங்கல் கிழக்கு பகுதி கழகச் செயலாளர்கள், திருத்தங்கல் மேற்கு பகுதி கழக செயலாளர்கள், சிவகாசி கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள், சிவகாசி மேற்கு பகுதி கழக நிர்வாகிகள், சிவகாசி மாநகராட்சி வட்டக் கழக செயலாளர்கள், சிவகாசி தெற்கு ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள், சிவகாசி கிழக்கு ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள், சிவகாசி மேற்கு ஒன்றிய கிளைக் கழகச் செயலாளர்கள மற்றும் ஒன்றிய கழக, பகுதி கழக, வட்டக் கழக கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மணிகண்ணன், தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வடபட்டி தனுஷ், கிழக்கு ஒன்றிய மாணவரணி வசந்தகுமார் நன்றி கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *