“வலிமை’ படத்தில் நடித்ததற்காக அஜித் சார் மிகவும் பெருமைப்பட்டார்” என்று படத்தின் இயக்குநரான எச்.வினோத் கூறியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘வலிமை’. அஜித் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் எச்.வினோத்.
படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், “வலிமை வெறும் ஆக்ஷன் படம் அல்ல…” என்றும் கூறுகிறார் இயக்குநர். படம் தொடர்பாக இயக்குநர் எச்.வினோத் அளித்த பேட்டியில், “வலிமை’ ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இது சமூக பிரச்சினைகளையும் பேசுகிறது. குடும்பப் படம் என்று சொல்லும்போது, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்ல, அது ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனை, அது எப்படி ஒரு குற்றத்தில் விளைகிறது.. ஹீரோ எப்படி அந்தக் குற்றத்தை தன் குடும்பத்தைச் சிதைக்காமல் தடுக்க முயல்கிறார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்…” என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு எங்கள் திட்டங்களை சீர்குலைத்தாலும், இந்த வழியில் சில நன்மைகள் நடந்துள்ளது. நாங்கள் படத்தை தீபாவளிக்கு வெளியிட விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு, டிசம்பர் அல்லது பொங்கல் ரிலீஸ் என்று நினைத்தோம், அதையும் செய்ய முடியவில்லை.உண்மையில், கொரோனாவின் ஒவ்வொரு அலையும் எங்களுக்கு வெவ்வேறு சிக்கல்களைக் கொண்டு வந்தன. ஆனால் தாமதங்கள் மேலும் இரண்டு மொழிகளில் படத்தை வெளியிட எங்களுக்கு உதவியது என்று நான் உணர்கிறேன்.
நடிகர்கள் தேர்வு நேரத்தில்கூட, படக் குழு படத்தை ஒரு பான்-இந்தியா படமாக திட்டமிட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் OTT பிளாட்ஃபார்ம்கள் வெற்றி பெறுவதால், நீங்கள் திரையரங்குகளில் வெளியிடாவிட்டாலும் கூட, உங்கள் படம் ஒரு இந்தியப் படமாக மாறும் சாத்தியம் உள்ளது. ஏனெனில், அவர்களே படத்தை பல மொழிகளில் டப் செய்கிறார்கள்…” என்றார்.
படம் குறித்து அஜித் என்ன கூறினார் என்பது குறித்து எச்.வினோத் கூறுகையில், “அஜித் சார் என்னிடம், “இந்தப் படத்தை செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். இந்த படத்தை செய்ததில் நானும் பெருமைப்படுகிறேன்.” என்றார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த ‘வலிமை’ படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக இது வெளியாகிறது.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]