• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வலைப்பட்டியில் நலதிட்டம் வழங்கும் விழா..,

ByKalamegam Viswanathan

Jul 28, 2025

மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு மணிமாறன்  அவர்களின் தலைமையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு வலைப்பட்டியில் நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  தெற்கு ஒன்றியம் வலையப்பட்டி
பகுதியில் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், மகளிர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு அரசு செய்த திட்டங்களை பொதுமக்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.

வளையங்குளம் ஊராட்சியில் உள்ள 700 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவகாசி வனராஜா , திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேட்டையன், ஒன்றிய செயலாளர்கள், தங்கபாண்டி, கழக அவைத்தலைவர், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர் காளிதாஸ், கிளை நிர்வாகிகள் மச்சக்காலை, சின்னகாளை மற்றும் பாண்டிசெல்வி  உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் திரளான கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.