• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி..,

BySeenu

Jul 26, 2026

கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவான ‘ஸ்வாகதம் 2026’ நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

சமூக வலைத்தளங்களில் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நேரத்தை வீணாக்குவதை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் தங்கள் எதிர்காலத்தை தாங்களே செதுக்கத் தொடங்க வேண்டும் என்று குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீ சங்கர் வாணவராயர் அறிவுறுத்தினார்.

பள்ளிக்கும் கல்லூரிக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய அவர், “இனி மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை மட்டுமே பின்பற்றுபவர்கள் அல்ல அவர்கள் தங்களின் சொந்த பயணத்தின் எஜமானர்கள் என்றார்.

மாணவர்கள் தங்களுக்குப் விருப்பமான பல்வேறு துறைகளை இணைந்து படிக்க வேண்டும் என்று ஊக்குவித்த அவர், பொருளியல் மாணவர்கள் அறிவியல் துறையையும், மொழிப்பாட மாணவர்கள் பொதுக் கொள்கைகளையும் கற்கத் தயங்கக் கூடாது என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்களிடம், தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பவர்களாக மட்டுமல்லாமல், அவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மகாத்மா காந்தி மற்றும் வள்ளலார் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தின் 42 ஆண்டுகால வரலாற்றையும் அவர் நினைவுகூர்ந்தார்.

நிறைவாக, கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கே.எஸ். நாராயணன் நன்றியுரையாற்றினார்.