• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்

Byவிஷா

Dec 23, 2024

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கவுன்சிலர் ஒருவர் உருவாக்கிய வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடிலை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ள நிலையில் பலரும் இல்லங்களிலும், தேவாலயங்களிலும் குடில் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். பலரும் கிறிஸ்துமஸ் குடில்களை பொருட்களால் அமைப்பதுடன் களிமண் மற்றும் பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட சொரூபங்களை குடிலில் வைப்பது வழக்கம். ஆனால் இவற்றிற்கு எல்லாம் மேலாக வித்தியாசமான முறையில் நாகர்கோவிலில் வீட்டில் குடில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 7வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் விஜிலா ஜெயசிங். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் விதத்தில் பிரம்மாண்ட குடில் ஒன்றை அமைத்துள்ளார். இந்த குடில் முற்றிலும் நூலால் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஊட்டியில் இருந்து பிரத்தேகமான நூல்களை வாங்கி கடந்த ஆறு மாத காலமாக இதனை செய்துள்ளார். இந்த கிறிஸ்துமஸ் குடிலை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்