• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ சூட்டுக்கு அனுமதி..!

Byவிஷா

Jun 11, 2023

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ ஷ_ட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் போட்டோ சூட் மற்றும் டிஜே பார்ட்டி என பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக திருமண போட்டோ சூட் வித்யாசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை ரயில் விமானத்தில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து ரயில் நிலைய மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் போட்டோ சூட் எடுக்க ரயில் நிலையத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரயில் பெட்டிகள் முன்பு போட்டோ சூட் எடுக்க கூடுதலாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிற ரயில் நிலையங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.