தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பணம் செலுத்தும் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் பல்வேறு புதிய திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் பேசிய அவர்..,
இந்த திட்டத்தை முதன்முதலாக சென்னையில் அமல்படுத்தும் நோக்கில், அதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு கொண்டு வந்த பின்னர் மற்ற பகுதிகளுக்கும் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும். அதன் பின்னர் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.