• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலினுக்கா வாக்களித்தோம்.., மக்களின் பிம்பமான ஆர்.பி.உதயகுமார்!

காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத நிலை, அரசு ஊழியர்கள், விவசாயிகள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை. இதைப் பார்த்த மக்கள் ஸ்டாலினுக்கா வாக்களித்தோம் என குமுறுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசி இருப்பதுதான் ஹைலைட்டான விஷயமே!

மேலும் இது பற்றிய நம்மிடம் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார்.., 

திமுகவின் ஆயுட்காலம் குறித்து நாடு முழுவதும் விவாதமாக உள்ளது இந்த இரண்டு கால ஆட்சியாளர்களின் நடவடிக்கையால்  மக்கள்  இந்த அரசின் ஆயுள் காலம் முடிய வேண்டும், ஒரு நாள் கூட தொடரக்கூடாது என்று நினைக்கின்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் 90 சகவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

எந்த சூழ்நிலையில் ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி  கவலைப்பட வேண்டியது இல்லை என்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவிலே முதலமைச்சர் பேசிய பேச்சு தமிழ்நாட்டில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

 இன்றைக்கு இரண்டு ஆண்டுகளிலே திமுக ஆட்சியின் ஆயுட்காலம் என்னப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்லுகிற போது இந்த பேச்சு மக்களிடத்திலே ஒரு அனுதாபத்தைபெறுவதற்காக முதல்வர் பேசினாரா ? ஏனென்றால் நடைபெறும் முக்கியபிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இது பேசப்பட்டதா என்பது தான் இன்றைய விவாதமாக இருக்கிறது

 மக்களுடைய அனுதாபத்தை பெறுவதற்காக, இன்றைக்கு தங்கள் மீது இருக்கிற கறையை துடைப்பதற்காக, தங்கள் இயலாமையை மறைப்பதற்காக, தங்கள் நிர்வாகதிறமையற்றதை மறைப்பதற்காக, 90% நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடத்தில் திசை திருப்புவதற்காக,  சொத்துவரிஉயர்வை, மின்சார கட்டண உயர்வை, சட்டம்ஒழங்கு சீர்கேட்டை இதையெல்லாம் மறைப்பதற்காகவா?

வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் ஆனால் விலையை பார்த்தாலே கண்ணீர் வருகிறது.

அதேபோல இஞ்சி விலையை பார்த்தாலே நமக்கு காய்ச்சல் வர மாதிரி விலைவாசி உயர்ந்து இருக்கிறது. காய்கறிகளை மக்கள் சாப்பிட முடியாத அளவில் 30 சகவீதம் விலை உயர்ந்து விட்டது. முதலமைச்சர் இது குறித்துஆய்வுக்கூட்டமோ, அறிவுரையை வழங்கவில்லை. 

ஜனாதிபதிக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழ்நாட்டு மக்கள் அந்த கடிதத்தை  படித்துப் பார்க்கிற போது தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்து இருக்கிற ஜீவாதாரபிரச்சனைகளான காவிரி பிரச்சனை, முல்லைபெரியார் பிரச்சனை, கட்சதீவு பிரச்சனை, மேகதாது பிரச்சனை ஏதாவது அதில் இடம் பெற்று இருக்குமா என்று பார்த்தால் எதுவும் இல்லை.தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களினுடைய நலனிலேயே அக்கறையோடு இந்த கடிதம் எழுதப்பட்டு இருக்கிறதா?  செந்தில் பாலாஜியிடம் அமலாக்கதுறை விசாரணையால் தொடர்ந்து ஏற்பட்டிருக்கிற பதட்டம், அந்த பதட்டத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கிற நடுக்கமா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக உள்ளது. 

ஆட்சியின் ஐந்தாண்டுகள் ஆயுளை இந்த இரண்டு கால ஆயுளாக எண்ணப்பட்டு வந்து சூழ்நிலை ஏன் வந்தது ?பிறர் மீது பழியை சுமத்தி விட்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள அனுதாபத்தில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர்.

தனக்கும், தன் அரசுக்கும், தன் கட்சிக்கும் அனுதாபத்தை தேடுகிறோம் என்ற முறையில் முதலமைச்சர் கல்யாணம் வீட்டில் பேசிய பேச்சு மக்களுக்கு சேவையாற்றும் தார்மீக  கடமையில் இருந்து முற்றிலும் விலகி சென்று விட்டார்.

ஆயிரம் ரூபாய் உதவி தொகையை 1,500 உயர்த்தி வழங்குவோம் என்று கூறியதை வழங்கவில்லை. பெண்கள் உரிமை தொகை திட்டத்தில் திமுக அரசு போட்ட தகுதியில் 90 சதவீத குடும்ப பெண்கள்  உரிமைத் தொகை பெற முடியாது .சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது .உயர் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார் இது சாதாரண நிகழ்வு அல்ல அதற்கு என்ன காரணம் என்று சிபிஐ விசாரணை அரசு அமைக்க வேண்டும். அரசு அலுவர்களுக்கு பாதுகாப்பை தர அரசு தவறிவிட்டது .இப்படியே சென்றால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். 

இந்த அரசினுடைய ஆயுட்காலம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் பேசுவதை இன்றைக்கு, ஆட்சிக்கு ஆபத்து இருந்தாலும் கவலை இல்லை என்று திசை திருப்பி ஸ்டாலின் திருமண விழாவில் பேசியிருக்கிறார்.

 காய்கறிகளை கூட வாங்கி சமைத்து சாப்பிட முடியாத நிலை, அரசு ஊழியர்கள், விவசாயிகள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை. ஆனால் முதலமைச்சரின்

இயலாமையை பார்த்து இவருக்காக நாம் வாக்களித்தோம் என்று இந்த தாய் தமிழ் நாட்டு மக்கள் வேதனைப்பட்டு, கவலைப்பட்டு, கண்ணீர் வடிக்கிறார்கள்.கவர்னரிடம் சண்டை போட நேரம் இருக்கிறது ஆனால் மக்களுக்கு சேவை செய்ய முதல்வருக்கு நேரம் இல்லை.

 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு எந்த முயற்சி எடுக்கவில்லை, தங்க முலாம் பூசப்பட்ட தகரம் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதி என்பதை இன்றைக்கு அப்பட்டமாக தெரிந்து போய், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்.

இந்த இரண்டு ஆண்டுகளிலே  இந்த நாட்டை வழிநடத்துவோர் மீது இருந்த நம்பிக்கை இன்றைக்கு அவநம்பிக்கையாக போய்விட்டது தன் மீது அனுதாபத்தை தேடவும், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவும் முதலமைச்சர் பேச்சும், கடிதமும் உள்ளது என மக்கள் கருத்தாக உள்ளது என கூறினார்.