• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரன்வீருக்கு நாம் அன்பை மட்டும் கொடுக்க வேண்டும் – ஆலியா பட்

Byகாயத்ரி

Jul 27, 2022

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்களை ரன்வீர் சிங் தன்னுடைய இணையதள பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார்‌. இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், பிரபல நடிகை ஆலியா பட் ரன்வீர் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதாவது நடிகை ஆலியா பட் டார்லிங்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய ஆலியா பட், ரன்வீர் சிங்குக்கு எதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் என்னால் கேட்க முடியாது என்றும், அவர் என்னுடைய சக நடிகர் என்றும், அவர் திரைப்படங்கள் மூலம் நமக்கு நிறைய செய்துள்ளார் எனவும், அவரை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் ரன்வீர் சிங்குக்கு நம்முடைய அன்பை மட்டுமே கொடுக்க வேண்டும், எதிர்ப்பை கொடுக்கக் கூடாது என கூறினார்.