• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை எதிர்க்கிறோம் – எம்பி விஜய் வசந்த் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியமண்டபத்தில் பிருந்தாவன்சொண்டு நிறுவனத்தின் சார்பில் 100குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு மாணவர்கள் நிகழ்த்திய களரி கலைகளை கண்டுமகிழ்ந்தார். இதையடுத்து மாணவர்ளுக்கு கல்வி உதவி தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் எம்பி விஜய் வசந்த் கூறுகையில், ” நீட் தேர்வு பயத்தால் தற்கொலை என்பது தவறான முடிவு ,இறைவன் கொடுத்த உயிரை அவராக எடுக்கும்வரைக்கும் நாமே தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. இதுபோன்ற சூழலில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும் என கூறினார் .

மேலும் அவர், பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரபடுவது எவ்வளவு நாள் நீடிக்கும் என தெரியவில்லை. தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்திவருகிறார். மக்களுக்கெதிரான திட்டங்களை ஆதரிக்கமாட்டார். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவேண்டாம் என தமிழக முதல்வர் கூறியிருப்பது கூட்டணி கட்சி என்ற முறையில் ஆதரிப்பதாகவும் கூறினார்.

D.Ignatius