விருதுநகர் மேற்கு மாவட்ட தொகுதிக்குட்பட்ட திருத்தங்கலில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது
சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்
சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியது.
நடுத்தர குடும்பத்தில் சராசரியாக மாத செலவு ரூபாய் 15,000 வரை செலவாகிறது இதில் பெண்களுக்கான ரூபாய் 1000 வழங்கப்படுவதால் எவ்வித பலனும் ஏற்படுவது இலலை.

சோதனையான கட்டங்களில் அதிமுகவை நம்பி படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், அதிக அளவு இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய கைமாறு செய்வோம். அதிமுக ஆட்சியில் வேலை வய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அற்புதமான ஆட்சியை எடப்பாடியார் வரும் 2026 இல் முதலமைச்சராக தொடர்வார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் செல்லும்போது வண்டியை நிறுத்தி கேள்வி கேட்கலாம். அதற்கு நன்றி கடன் பட்டவனாக தொகுதியில் பணியாற்றுவேன்.
திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது துணைத் தலைவராக பணியாற்றினேன். அப்போது திருத்தங்கல் பகுதி முன்மாதிரியாக அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன பேசினார்.






; ?>)
; ?>)
; ?>)
