• Mon. May 6th, 2024

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்.., அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

ByKalamegam Viswanathan

Dec 2, 2023

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு வரும் தாய்மார்களின் உறவினர்கள் தங்க இடம் இல்லாமல் டீக்கடை மற்றும் தற்க்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் அவலம் சம்பந்தப்பட்ட அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து 500 மேற்ப்பட்ட தாய்மார்கள் வந்து செல்கின்றனர்
இந்த மருத்துவமணையில் சுமார் 102 படுக்கை வசதி உள்ளது.

இந்த மருத்துவமணை வளாகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிய கட்டிடம் 2018ம் ஆண்டு முதல் நகராட்சியின் கிழ் செயல்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த காரணமும் இன்றி பூட்டி உள்ளனர்.
பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் உறவினர்கள் வெளியில் தங்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானேர் வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் 102 படுக்கை வசதி உள்ளது. ஆனால் நேற்று மட்டும் 140 க்கு மேற்பட்ட தாய்மார்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் படுக்கை வசதி பற்றாக்குறையாக உள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பில் சுமார் 50 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கடந்த 2018 ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை செயல்பட்ட கட்டிடம் 20 நாட்களாக பூட்டிய நிலையில் உள்ளது. காரணம் இன்றி பூட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தால் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் உடன் வரும் உறவினர்கள் இது பேரிடர் காலம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு எதிரில் உள்ள டீக்கடைகளில் தற்காலிக பேருந்து நிலையத்திலும் படுக்கும் அவள நிலை உள்ளது.

மேலும் 102 படுக்கை உள்ள அரசு மகப் பேறு மருத்துவமனையில் 140 நபர்கள் இருப்பதால் 1 படுக்கையில் 2 பேர் தங்கும் நிலை உள்ளது.

தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் உள்ள 50 படுக்கைகள் உள்ள கட்டிடத்தை அரசு மகப் பேறு மருத்துவமணை நிர்வாகத்திடம் வழங்கினால் பிரசவ தாய்மார்கள்
மற்றும் உடன் இருப்பவர்களுக்கு பயனாக இருக்கும். சம்மந்தபட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனிடம் மனு கொடுத்து உள்ளோம் என மருத்துவ துறை சார்பில் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ சம்மந்தபட்ட கட்டிடம் மருத்துவதுறை நிர்வாகத்தில் இருந்தால் மட்டுமே குழந்தை பெறும் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பயன்படுத்த முடியுமே தவிர நகராட்சி நிர்வாகத்தில் இருந்தால் இந்த மாதிரி தவறுகள் நடக்கத்தான் செய்யும். ஆகவே முறையாக அந்த கட்டிடத்தை மருத்துவத்துறை நிர்வாகத்திடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *