
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக்குக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பு நிகழ்ச்சியின் பொழுது,
பிறந்த குழந்தை ஒன்றை பெற்றோர்கள் கொண்டு வந்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா விஸ்வநாதன், திண்டுக்கல் சி. சீனிவாசன் மற்றும் வேட்பாளர் முகமது முபாரக்கிடம் கொடுத்து பெயர் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்பொழுது ஆணா? பெண்ணா? என கேட்டு, சூரியனை பார்த்தால் குழந்தைக்கு கூட பிடிக்கவில்லை. இரட்டை இலையை பார்த்து சிரிக்கிறது.
எனவே புரட்சித்தலைவரின் பெயரான ராமச்சந்திரன் என மூவரும் இணைந்து பெயர் சூட்டுகிறோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.
