தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 1130 கன அடி வீதம் மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய மூன்று மாவட்ட ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,

திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பெரியார் பிரதான கால்வாய் வழியாக சென்று திருமங்கலம் பிரதான கால்வாயிலும் பிரிந்து மூன்று மாவட்டங்களுக்கு செல்கிறது.
பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் பெரியார் பிரதான கால்வாயில் பாதி அளவிற்கு மேல் நிரம்பி சீறிப்பாய்ந்தபடி கால்வாயில் செல்கிறது.
இதனால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் யாரும் பெரியார் பிரதான கால்வாயில் குளிப்பதற்காகவோ, துணி துவைப்பதற்காகவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் கால்வாயை கடப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் வைகை நீர்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
