



இராஜபாளையம் தொகுதியில் இன்று ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஏற்பாட்டில், இராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து 8 வருடங்களாக கோடை வெப்பத்தை தணிக்கும் நோக்கில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு இராஜபாளையம் நகர்பகுதியான சாந்தி தியேட்டர் அருகில் , பழைய பேருந்து நிலையம் அருகில் என இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் , நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், வெள்ளரி உள்ளிட்ட பழங்களையும், தண்ணீர் கேன்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா , முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், துணை சேர்மன் கல்பனா குழந்தைவேலு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் , உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


