கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று மாலை நிலவரப்படி, அணையிலிருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கு ஏற்ப்பட்டு, ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே சுசீந்திரத்தில் பழையாற்றின் கரை உடைத்து சுசீந்திரம் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது இப்பகுதி மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1, சிற்றாறு – 2 உள்ளிட்ட முக்கிய அனைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளிலிருந்து நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில், நேற்று காலை 16 ஆயிரம் அடியாக உயர்ந்து. அது 19000 அடியாகும் பிற்பகல் உயர்த்தப்பட்டு பின்னர் நேற்று மாலை வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

உபரி நீர் திறப்பால் ஆறுகள் கால்வாய்கள் குளங்களுக்கு தண்ணீர் வரத்து பெருக்கெடுத்துள்ளது. கோதையாறு, பரளியாறு, குழித்துறை, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுசீந்திரம் பகுதியில் ஆற்றின் கரைகள் உடைந்து தண்ணீர் சுசீந்திரத்தில் ஊருக்குள் புகுந்தது, சுசீந்திரம் கோவிலில் வாசலிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் சுசீந்திரத்தில் உள்ள ஊர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஒரு சில இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்றாலும், பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி தத்தளித்து வருகின்றனர்.