• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதா ? டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

ByA.Tamilselvan

Mar 5, 2023

தமிழகத்தில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடைபெற்றதாக வதந்தி பரவிவரும் நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை. வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம். வதந்தி தொடர்பாக வட மாநில டி.ஜி.பி.க்களுடனும் பேசியுள்ளேன். பீகார் குழு ஆய்வு செய்யும் போது மேலும் நம்பிக்கை அதிகரிக்கும். வட மாநிலத்தவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்நிலையில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கான உதவி எண்களை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இதன்படி, வட மாநிலத் தொழிலாளர்கள், 0421-22-3313, 9498101300, 9498101320 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.