தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்படி உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அந்தந்தப் பகுதி வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




